rajesh
9 min readMar 4, 2023

ஆரோவில் எதிர்கால இந்தியாவின் தேவை

ராஜேஷ — முருகேசன் தேவராஜ் மொழிபெயர்த்துள்ளார் (original English version)

1960களின் பிற்பகுதியில் பிறந்த ஆரோவில் எந்த திசையிலும் பயணிக்கும் சூழலில் உள்ளது, ஒன்று அது மெதுவாக ஒரு மெழுகுவர்த்தி போன்று அணைந்து விடும் அல்லது அது ஒரு அருமையான மறுமலர்ச்சியை பெற்று அதன் உன்னதமான குறிக்கோளை அடைய ந‌ல்ல வாய்ப்பினை அடையும், இந்தக் கட்டுரை இச்செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறது.பழைய மற்றும் புதிய கட்டுக்கதைகள் மூலம் இதை கண்டுணர்வது மிகவும் கடினம், மனம் ஒரு செயலை ஏற்றுக்கொண்டால் நடைமுறைக்கு வளைந்து கொடுப்பது சிரமம் மேலும் குறிக்கோளை அடைவதும் கடினமாக இருக்கும். ஆனால் ஆரோவிலியர்கள் கடந்த காலத்தில் சாத்தியமற்றதையும் தெளிவுடன் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்: அவர்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்க முடியும்.

அதைபோன்று இந்தியாவும் எந்த திசையிலும் பயணிக்கும் ஓரு சூழ்நிலையில் உள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகளை காண்பது இன்னும் கடினமாக உள்ளது, மேலும் இந்த அளவிலான நாட்டை வழி நடத்துவது சாத்தியமில்லை என்று தோன்றுவதால் மக்கள் அவற்றைத் தேடுவதில்லை, இருப்பினும் விளம்பரத் துறையின் முயற்சிகள் இது முற்றிலும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளன. நூறு கோடி ம‌க்க‌ளி‌ன் எதிர்காலமானது இத்தனை விளம்பர இரைச்சல், இடைவிடாத செயல்கள் இடையே ஒரு சிறந்த தேர்வு தலை தூக்குவதை பொருத்து தீர்மானிக்க பட போகிறது, ஆரோவில் தனது பாதையை மறுவரையறை செய்து வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கும் அதையே செய்ய உதவலாம்,

ஒரு சிறிய, மறைக்கப்பட்ட சமூகம் முழு துணைக்கண்டத்திற்கும் எவ்வாறு வழிகாட்டுதலை வழங்க முடியும்? தி மதர் எனப் பின்பற்றுபவர்களால் அறியப்பட்ட மிர்ரா அல்பாஸா என்ற பிரெஞ்சுப் பெண்ணின் கனவை நனவாக்கும் வகையில், பயனற்ற நிலத்தில் ஆரோவில் நிறுவப்பட்டது. அவர் மூன்று நோக்கங்களை முன்வைத்தார்,

1. மனித ஒற்றுமையை நோக்கிப் பாடுபட அனைத்து தேசங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியுடன் கூடும் இடமாக ஆரோவில் இருக்க வேண்டும்.

2. ஆரோவில் எந்தவொருவரும் சேவை செய்ய வரக்கூடிய இடமாக இருக்க வேண்டும், வேலையின் மூலம் அவர்களின் உள்ளுணர்வை உயர்த்த வேண்டும்.

3. ஆரோவில் உலகிற்கு சேவை செய்ய வேண்டும், உலகிற்கு தேவையான மாதிரியாக மாற வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் மேற்கூறிய மூன்று நோக்கங்கள் ஆரோவில்லில் எந்த அளவில் சாதிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்:

1. மனிதகுலத்திற்கான ஒரு சோலை

ஆரோவில்லின் மையமாக ஒரு ஆலமரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது அற்புதமாக பரவி,சிந்தனை, அமைதி மற்றும் பகிரும் உணர்விற்கான ஒரு அழகான இடத்தை உருவாக்கியுள்ளது. இது இயற்கையின் ஒரு அற்புதமாக பார்க்கவும் உணரவும் படுகிறது, அதற்கு அடுத்து, ஒரு பெரிய தங்கக் குவிமாடம் ஒரு தியான அறையை கொண்டுள்ளது. இது மனிதகுலத்தின் அதிசயமாக ஆண்டுதோறும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அதிசயங்களும் ஆரோவில்லை காட்சியாக உருவக படுத்துகின்றன.

80களில், உரிமை மற்றும் வழிகாட்டுதலில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்திய அரசாங்கம் அழைக்கப்பட்டது. இந்தியா ஆரோவில் மீது நம்பிக்கையையும், மனிதகுலத்திற்கு சில சாத்தியமான எதிர்காலத்தையும் கண்டதால், 1988 தீர்மானத்தில் ஆரோவில்லுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது — இது நவீன உலகில் முதல் முறையாகும். இந்திய அரசு வழங்கும் சிறப்பு விசா மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் மக்கள் வந்து ஆரோவில்லில் வசிக்கலாம்.இது ஆரோவில்லை உண்மையிலேயே தனித்துவமானதாகவும், மனிதகுலத்திற்கான உண்மையான சோலையாகவும் ஆக்குகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆரோவில்லை வளர்ப்பதற்கும், செயல்பாட்டில் தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் உதவியுள்ளனர்.

ஆரோவில், மனித ஒற்றுமையை நோக்கிய புதுமைகளை பரிசோதனை செய்வதற்கான இடமாக உருவாக்கப்பட்டது. அரசாங்கம் ஆரோவில்லுக்கு பாரம்பரிய, படிநிலை இலாப நோக்கற்ற நிர்வாக அமைப்பு தேவையில்லாத ஒரு சிறப்பு கௌரவத்தை வழங்கியது, மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மற்றும் அதிகாரத்துவம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க, சுய-ஆட்சியில் பரிசோதனை செய்ய ஆரோவில் சுதந்திரமாக இருந்தது. சில சிக்கல்கள் இருந்தபோதிலும், மக்களின் ஈடுபாடு, உழைப்பு மற்றும் வேட்கை காரணமாக ஆரம்பகால பரிசோதனைகள் வேலை செய்தன,

நிலங்கள் சீரமைக்கப்பட்டு நீர் நிலைகள் ஒழுங்குபடுத்த பட்ட பின் அடு‌த்த கட்ட நகர்வுக்கு ஒரு புதிய நிர்வாகம் தேவைப்பட்டது.மற்றொரு சோதனை முயற்சி செய்யப்பட்டது. இருப்பினும், அது தோல்வியடைந்தது, மறுசீரமைத்து மற்றொரு பரிசோதனையைத் தொடங்குவதற்குப் பதிலாக, சோதனை ஆளுகை மாதிரி திடப்படுத்தப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மக்களை புறக்கணித்தது, அதிகார அமைப்பில் ஏ‌ற்ப‌ட்ட வெற்றிடம். வெளிப்புற சக்திகளை உள்ளே அழைத்தது.

2. பணி, சேவை மற்றும் வளர்ச்சி

ஆரோவில்லின் கனவை நனவாக்க உலகம் முழுவதிலுமிருந்து சில ஆயிரம் பேர் பயணம் செய்து உதவி செய்தார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் அற்புதமான முயற்சிகள் மூலம், மாத்ரிமந்திர் கட்டப்பட்டது. ஆலமரமும் வளர்ந்து வந்தது, இந்த இரண்டு அற்புதங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மரங்களும் பல கட்டிடங்களும் உருவாகின.

கட்டிடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் கட்டிடத்தில் பல சோதனைகள், 3000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும் 3000 தன்னார்வலர்கள் மற்றும் 5000 பேர் பணிக்கு வர வழி வகுத்தது, குடியிருப்புகளை 59 நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற,ன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களைப் போலவே ( ஐரோப்பிய நாடுகளை விட மக்கள்தொகை மற்றும் வேற்றுமையில் அதிகம்). இந்த அற்புதமான பன்முகத்தன்மையில், என்ன வேலை மற்றும் சேவை செய்யப்படுகிறது?

கடந்த ஐந்து தசாப்தங்களில் பலர் காடு வளர்ப்பு, நீர், விவசாயம், கட்டிடக்கலை, கலை, ஒலி, மறுசுழற்சி, உரிமை, நிர்வாகம், பொருளாதாரம், ஆரோக்கிவம் மற்றும் உணர்வு ஆகியவற்றில் பரிசோதனை செய்துள்ளனர்.

அவற்றின் முடிவுகள் அருமையானவை, ஆனால் அவற்றைப் கண்டறிய நேரமும் உற்று கவனித்தலும் தேவை. ஆரோவில் மளிகைக் கடைகள் பாலித்தீன் பயன்பாட்டை 80 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஆரோவில் இந்தியாவிலேயே சிறந்த கழிவுப் பிரிப்பு அமைப்பை கொண்டுள்ளது. இது அதிக எண்ணிக்கையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உள்ளடக்கியது . பல சோதனைகள் தோல்வியடைந்தன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், மேலும் சில வெற்றிகளுக்கு செல்ல இன்னும் வழி முறைகளை செய்ய வேண்டியுள்ளது,

ஆரோவிலியர்கள் ஏதேனும் மேலான உணர்வைப் பெற்றிருக்கிறார்களா என்று நாம் வாதிடலாம். ஒரு செய்தி தெளிவாக புலப்படுகிறது.. ஒவ்வொரு நாளும் இன்றியமையாத சக்தி மற்றும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் எழுபது மற்றும் எண்பது வயது உடையவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது மிகவும் நம்பிக்கை அளிக்கிறது, சில நேரங்களில் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது மேலான உணர்வு, நிச்சயமாக ஆரோவில்லில் கண்டுணர முடிகிறத. இங்கு மக்கள் பொருள் நுகர்வு மற்றும் கவர்ச்சியில் இறங்கவில்லை. இங்கு பாசாங்குத்தனம் மிகக் குறைவு. ஒப்பனை அதிகம் இல்லை. யார் என்ன ஆடைகள் அணிந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. ஜனாதிபதி வருகைக்கு கூட, மக்கள் அரை கால் சட்டையில் தோன்றுவார்கள். மக்கள் வானிலைக்கு ஏற்றவாறு சரியான முறையில் ஆடைகள் அணிவார்கள். அறை குளிரூட்டிகள் வந்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் அவை இல்லாமல் நிர்வகிக்கின்றனர். உணவகங்களில் தொலைக்காட்சிப்பெட்டிகள் இல்லை. வெகு சிலர் மட்டுமே சொந்தமாக கார்கள் வைத்திருக்கிறார்கள் நீங்கள் எந்த வாகனத்தில் வருகிறீர்கள் என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை. மக்கள் மனிதத்தன்மையை பிறரிடமும் காண்கிறார்கள்.

விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பரம் இல்லாத ஒரே இடம் இந்தியாவில் இதுவாக இருக்கலாம். இது குடியிருப்பாளர்கள் இலவசமாக பணம் ஈட்டுகிறார்கள் என்று அர்த்தமாகாது, அவர்கள் மிகவும் சுதந்திரமாக சிந்திக்கிறார்கள் மற்றும் அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை இன்னும் தெளிவாக வகுக்கிறார்கள் என்று அர்த்தம்.

இருப்பினும், சில சிக்கல்கள் மேலெழுந்துள்ளன. ஆரோவில்லால் விவசாயம், கழிவுப்பொருடகள் மேலாண்மை மற்றும் கட்டுமான உழைப்புக்கு போதுமான தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை.. புதிதாக வருபவர்கள் உடல் உழைப்பற்ற வேலைகளையே விரும்புகிறார்கள். பழைய ஆரோவில் பங்கேற்பதன் மூலம் உருவாக்கப்பட்டது, இது தம்முடையது என்ற உணர்வுக்கு வழிவகுத்தது. எனவே செயல்முறை மிக முக்கியமானதாக இருந்தது. அனைத்து புதிய கட்டுமானங்களும் ஒப்பந்தக்காரர்கள் மூலமாகவே உள்ளன,மேலும் செயல்முறை துணை நிறுலனங்களிள் பங்களிப்பை பொறுத்து அமைகிறது,

முக்கியமான செய்தி என்னவென்றால், மக்கள் பணக்காரர்களாகவோ, பிரபலமாகவோ அல்லது சக்திவாய்ந்தவர்களாகவோ ஆவதற்கு ஆரோவில்லுக்கு வரவில்லை, அவர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் பணியில் அர்த்தங்களைக் கண்டுபிடிக்க வருகிறார்கள், இது

ஒரு பயணத்தை, தெய்வீகம் மற்றும் புனிதத்தை நோக்கி அவர்களுக்கு வழங்குகிறது

3. உலகிற்கு சேவை செய்யுங்கள் — ஒரு எடுத்துக்காட்டாக இருங்கள்

நிலம் கையகப்படுத்தும் அரசிடம் இருந்து வந்த வாய்ப்பை நிராகரித்து, ஆரோவிலியர்கள் தனிநபர்களின் ஆதரவுடன் நிலத்தை வாங்கத் தொடங்கினர். சில ஊகங்கள் மற்றும் ஊழல்கள் இருந்தபோதிலும், ஆரோவில் அதன் மைய வட்டத்தில் 87% நிலத்தையும் சுற்றியுள்ள ‘பசுமை’ பெல்ட்டில் 35% நிலத்தையும் கையகப்படுத்த முடிந்தது.

உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க, ஆரோவில் ஒரு நகரமாகவும், நிலையானதாகவும், பார்வைக்கு ஈர்க்கக்கூடியதாகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வடிவமைக்கப்பட்ட நகரம் செயல்படவில்லை, ஒரு குறைபாடு.

உயர்ந்த நீர்நிலை, ஆரோக்கியமான மண், மில்லியன் கணக்கான மரங்கள் மற்றும் சுத்தமான, குளிர்ந்த காற்று ஆகியவற்றை வெளிப்படுத்தியது.

சில குடியிருப்பாளர்களுக்கு கூட, பெரும்பாலும் கண்ணுக்கு தெரியாத பல விஷயங்கள் வெளிப்பட்டன.

ஒரு உதாரணம்: 25கிமீக்கும் அதிகமான சைக்கிள் பாதைகளுடன், ஆரோவில் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மாசு இல்லாத, சத்தமில்லாத, பாதுகாப்பான மற்றும் உற்சாகமளிக்கும் வெற்று கால்களுடன் நடக்கும் போக்குவரத்து வழிகளை வழங்குகிறது.

மற்றொரு உதாரணம்: வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஆர்ட் ஸ்டுடியோக்கள், கலை நிறுவல்கள், குப்பைகளை கலையாக உயர்த்துவதற்கான இயக்கம்.

ஆரோவில் ஆற்றல் மிக்கவர்களுக்கு பரிசோதனை செய்ய இடமளிக்கிறது, மேலும், உலாவவும், சிந்திக்கவும், தொடர்பு கொள்ளவும், இணைக்கவும் இடங்களை வழங்குகிறது.

ஆரோவில்லில் நிறைய யோசனைகள், பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் வாழ்க்கை ஆய்வகத்திலிருந்து எதை மாதிரியாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்க, நாட்டின் மற்ற பகுதிகளின் நிலையை ஒருவர் தெளிவாகப் பார்க்க வேண்டும்.

மாநிலம் மற்றும் நாட்டின் நிலைமை

இந்தியாவில் வாழும் மிகப் பழமையான கலாச்சாரமான தமிழ்நாடு மாநிலத்தில் ஆரோவில் அமைந்துள்ளது. அதன் வரலாற்றில் கண்கவர் மற்றும் நடைமுறைச் சாதனைகள் உள்ளன. ஆனால் சந்தை பொருளாதாரம் அமைதியாள மக்கள் மற்றும் சுத்திகரிப்பு நீர் நிறைந்த நிலத்தில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

பேராசையும் ஊழலும் அதிகரித்துள்ளன, கடந்த சில பத்தாண்டுகளில் வளர்ச்சியானது புனிதமான மற்றும் அமைதியான வாழ்க்கையை அழித்து ஒரு சிலருக்குப் பொருள் ஆதாயங்களைக் வழங்கியது., மாலை வேளையில் இடப்படும் அழகிய கோலம் இடும் வழக்கம் கிட்டத்தட்ட மறைந்து விட்டது, காலையில் இடப்படும் கோல வழக்கமும் குறைந்து வருகிறது. அழகான நிலம் வளர்ந்து வரும் அவலட்சணமான பாலித்தீன் கவசத்தால் சிதைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது, ஆனால் மக்கள் நுகர்வு பொருட்களுக்கு ஆசைப்படுவதால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கவர்ச்சி மற்றும் செல்வச் செழிப்பிற்குள் இறங்குவது வேகத்தைப் பெறுவதால், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி கொதித்தெழுகிறது. நெறிமுறைகள் மற்றும் அறநெறிகள் குறித்து இதுவரை எழுதப்பட்ட மிகப் பெரிய படைப்புகளில் ஒன்றான, உலகளாவிய ஞானத்தின் திருக்குறள் அதன் ஞானிகளை விட்டு வெகு தூரம் செல்கிறது,

இந்தியாவின் மற்ற பகுதிகள் இன்னும் அதன் நிலையிலிருந்து இறங்கியுள்ளது.

நுகர்வோர் மற்றும் சந்தை சக்திகள் மக்களின் இதயங்களில் பாரம்பரிய புராணங்களின் இடத்தை நீக்கிவிட்டன. தனிப்பட்ட வெற்றியை நோக்கிய உந்துதல் ஒரு சிலரை மிகவும் செல்வந்தர்களாக்கியுள்ளது, ஆனால் பொதுவான நிலையில்; ஒட்டுமொத்தமாக சமூகம் ஒரு பரந்த கழிவுநீர் குழிக்குள் சுழன்றுவிட்டது. வெளிப்படையான நுகர்வு — வீட்டின் முன் கதவுக்கு வெளியே பெருகிவரும் குப்பைக் குவியல்களுக்கு கூட எந்த கவலையும் இல்லாமல் ஒரு பெரிய மக்கள் தொகை வளர்ச்சியின் இயந்திரமாக உள்ளமது. உற்பத்தி, ஒழுக்கம், திறன்கள், துல்லியம், உள்கட்டமைப்பு மற்றும் நல்ல நடத்தை ஆகியவற்றைத் தவிர்க்கும் புற்றுநோய் வளர்ச்சியாக உள்ளது.

அமெரிக்கர்கள் மற்றும் சீனர்கள் இணைந்து எடுத்ததை விட இந்தியர்கள் அதிக நிலத்தடி நீரை பிரித்தெடுக்கிறார்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தூய நீர் படுக்கைகளை கபளீகரம் செய்கிறார்கள். மண் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்படும் நச்சுக் கழிவுகள், நீர்நிலைகளை சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு விஷமாக்கியுள்ளது. எந்த விலையிலும் லாபம் ஈட்டத் துடிக்கும் வணிகத் தலைவர்களும் அரசாங்கமும் புனிதம் என்ற கருத்தை இழந்துவிட்டனர்: அவர்கள் பொது மரியாதையின்றி, ஏழைகள் மற்றும் குரலற்றவர்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல், தங்கள் சொந்த மரபுக்காகக் கூட செயல்படவில்லை.

உலகின் மிக மோசமான சுகாதார குறியீடு காற்றின் தரம் அதிக எண்ணிக்கையிலான மாசுபட்ட நகரங்கள் மற்றும் ஆறுகள், உலகின் பிற பகுதிகளை விட அதிக கழிவுநீர் வெளிப்பாடு என இந்தியா இருப்பதால், மக்கள் அதற்கான விலையை செலுத்துகின்றனர். கூடுதலாக, சாதி, குழந்தை சுரண்டல் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு போன்ற பயங்கரமான சமூகப் பிரச்சினைகள் அடிப்படை ஆதாரங்களுக்கான அணுகலை மோசமாக்குகின்றன. புனிதமான சுத்திகரிப்பு நீரூற்றுகள் நிறைந்த நிலம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நச்சுக் கழிவாக மாறிவிட்டது. ஊடகங்கள் இந்த குழப்பத்தை மறைக்க உதவுகின்றன, மக்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சனைகள் திசைதிருப்பப்பப்படுகின்றன. கவனத்தை சிதறடிக்கும், கவர்ந்திழுக்கும் பொழுதுபோக்கின் வெற்றி நம்ப முடியாத அளவில் உள்ளது இது மக்களை இந்த எதிர்காலம் இல்லாத இழிநிலையில் வாழ வைத்துள்ளது.

தியானம் வேரூன்றியிருந்த, வாழ்க்கையின் வேகம் ஒருபோதும் விரையாத ஒரு நிலத்தில் அதன் வேர்களை அசைத்து, புலன்களைத் திகைக்கவைக்கும் மற்றும் ஆழ்ந்த சிந்தனையைத் தடுக்கும் ஒரு வெறித்தனமான வேகம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய விளம்பரப் பிரச்சாரத்தின் தாக்குதலின் கீழ், இந்தியர்கள் தங்கள் உடல் மற்றம் நிலம் இரண்டையும் தெய்வீக வசிப்பிடங்களாகப் பார்க்காமல் தங்கள் உடலை அவலட்சணமாகவும், தங்கள் நிலத்தை குப்பைக் கிடங்கிற்கு ஏற்றதாகவும் பார்க்கிறார்கள், பணக்காரர்கள் மிஞ்சியுள்ள இயற்கை இடங்களை கட்டிடங்களாக்குவதில் லாபம் காண்கிறார்கள். மீதமுள்ளவர்கள் திரையில் காட்சி விருந்துகளை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். விரைவான,

ஆனா‌ல் தொலைநோக்கு பார்வை இல்லாத செயல்களின் மூலம் பாரம்பரியத்தின் மாண்புகளை கருதாமல் அதன் பெருமையை உணராமல் இந்தியா உயிர்ப்புடன் வைக்கப்படுகிறது

இந்தியா என்ன செய்ய வேண்டும்

நாடு பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது, அது இதுவரை அவற்றை மக்களிடமிருந்து மறைக்க முடிந்தது, பிரகாசமான திரைகளுடன் மக்களை திசை திருப்புகிறது. தண்ணீர் பற்றாக்குறை, நீரின் தரம், காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம், கழிவுநீர், குப்பை, பாலித்தீன் கழிவுகள் போன்றவை உடல்ரீதியான பிரச்சனைகளில் சிலவாகும், சமூகத்தை பிரித்தல், திரைகளை நிறுவனமாக தனிமைப்படுத்துதல், குடும்ப பிணைப்புகளை பலவீனப்படுத்துதல் மற்றும் அடிமையாதல் ஆகியவை நிலவும் சமூக பிரச்சனைகளில் சிலவாகும். விரக்தியடைந்த இளைஞர்கள் மனிதனின் தெய்வீகத்தன்மையில் குறைந்தளவு ஆர்வம் காட்டுவதுடன், பலர் அடிப்படைவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மையின் பக்கம் திரும்புவதால், துணைக்கண்டத்தில் ஆன்மீகப் பிரச்சனைகளும் வெளிப்பட்டு வருகின்றன.

இந்தியா பிற நாடுகளுடன் போட்டியிடுதை கைவிட வேண்டும். அதிகாரம் மற்றும் பொருள் முன்னேற்றத்திற்கான செல்லும் இனம் புனிதத்தின் எதிர் திசையில் செல்கிறது. வேலையின்மை வளர்ச்சி, சுற்றுச்சூழல் அழிவு, மற்றும் மது, புகையிலை, நொறுக்குத் தீனி, சர்க்கரை மற்றும் திரை போன்ற போதைக்கு மக்களைத் தள்ளும் பாதையில் இந்தியா தொடர முடியாது. மக்களை ஆரோக்கியமற்ற, செயலற்ற நுகர்வோர் ஆக்குவதன் மூலம் அது தொடர்ந்து வளர முடியாது.

காலங்காலமாக முன்னோர்கள் அறிவுறுத்தியபடி, இந்தியா புனிதமானதை நோக்கிய ஒரு ‘பயணத்தை’ உருவாக்க முடியும், அங்கு மக்கள் உயர்த்தப்பட்டு வாழ்கையின் அர்த்தம் கொண்டு அவர்கள் அவர்களுக்குள்ளும் இறைவனுக்கும் சேவை செய்ய பணிபுரிவார்கள்,

இது லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் தஙகள் மகத்தான அதிகாரத்தை இரக்கமின்றி தங்கள் திட்டங்களை நிறைவேற்றும் தலைவர்களுக்கு தடுக்க ஒரு முடியாத வேகத்தில் செல்லும் நாகரிகத்தின் அச்சம் தரும் கோரிக்கையாகும், ஆனால் பண்டைய கலாச்சார மரபு கொண்டவர்கள் இன்னமும் சிலர் இருப்பதனால் இதை மக்களின் இதயங்களில் ஏற்றி வைப்பதற்கான சக்தி உள்ளது. நூறு கோடி மென்மையான மக்களின் மூடிய இதயங்களை நாம் ஒளிரச் செய்ய முடியுமா? மங்கலான ஒளி தேடல் விளக்குகள் பிரகாசமான தெளிவான திரைகளை வெல்ல முடியுமா? ஒரு மென்மையான ஓசை ஒரு பேரிரைச்சலை அமைதியாக்க முடியுமா?

ஆரோவில் எப்படி உதவ முடியும்

1970 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 55 கோடியாக இருந்தது, 20% க்கும் குறைவான நகர்ப்புறம் இருந்தது. 2022 ஆம் ஆண்டில், 140 கோடி மக்கள், அதிகாரப்பூர்வமற்ற முறையில், 40% க்கும் அதிகமான நகர்ப்புறங்களில் உள்ளனர், பெரும்பாலான கிராமப்புறங்களில் வருமானத்திற்காக நகர்ப்புறங்களைச் சார்ந்துள்ளனர். தண்ணீர், கழிவுநீர், மின்சாரம், சாலைகள் மற்றும் குப்பைகளை அகற்றும் வசதி இல்லாமல் — உள்கட்டமைப்பு இல்லாமல் நகரங்கள் பெருகிவிட்டன, மேலும் அவை நெருக்கடியில் உள்ளன. காற்று மாசுபாடு, நீரின் அளவு மற்றும் தரம், கழிவுநீர் தேங்குதல், குப்பைகள் குவிதல், போக்குவரத்து இரைச்சல். எந்த நகரமும் இன்றைய நாளை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்காது. கவர்ச்சியான திரை மக்களை வீட்டிற்குள்ளும் செயலற்ற நிலையில் நாளைய தொழில்நுட்பம் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் வைத்திருக்கிறது. பின்பற்றக்கூடிய நகர்ப்புற மாதிரி என்று எதுவும் இல்லை. இந்த அடர்ந்த, தற்காலிகமாக வளர்ந்த நகரங்களில் புதிய உள்கட்டமைப்புகளை அடுக்குவது சாத்தியமில்லை. ஏற்கனவே உள்ளதை மறுவடிவமைப்பு செய்ய வழி இல்லை; எந்தவொரு புதிய வளர்ச்சியையும் சரியாக வடிவமைக்க நிதி திட்டமிடல் இல்லை. பணக்காரர்கள் இதை அறிந்திருக்கிறார்கள் மேலும் அவர்கள் ஆடம்பரமான தங்கும் கட்டுமானங்களை (நல்ல உள்கட்டமைப்பு இல்லாமல்), கட்டுவதற்கு, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அல்லது தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கிராமப்புறங்களை வாங்குகிறார்கள்.

இந்த காலகட்டத்தில், ஆரோவில் ஒரு மாதிரியாக இருக்க முடியும். கிராமப்புற வளர்ச்சியின் முன்மாதிரி. ஏழைகளும் பணக்காரர்களும் அழகான பொதுவான வசதிகள், கலை மற்றும் கைவினைப்பொருட்களுக்கான விற்பனை நிலையங்கள் மற்றும் அவர்களின் உணவு மற்றும் தண்ணீருக்கு அருகில் ஒன்றாக வாழ முடியும். கிராமங்கள் வசதிகளை அளித்து, வளங்களைப் பகிர்ந்துகொண்டு, சுத்தமாகவும் அழகாகவும் இருந்தால், ஏழைகள் நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய அவசியம் ஏற்படாது. மென்மையாகவும் எளிமையாகவும் வாழ்வதால், மக்கள் ஒருவருக்கொருவரை இயற்கையுடன் இணைக்க முடியும், உயர்ந்த நனவுக்கான பாதையில், அவர்களின் சரியான விதிக்கு ஒன்றாக நடக்க முடியும்.

இந்திய நகரமயமாக்கலின் போக்கு அதை வாங்கக்கூடியவர்களுக்கு ஆடம்பரமாக உள்ளது, அதே நேரத்தில் ஏழைகளின் கைப்பேசித் திரையைத் தவிர செல்ல இடமின்றி பொதுப் பகுதிகள் ஆக்ரோஷமாக தியாகம் செய்கின்றன. ஆரோவில் வழங்கும் மாதிரி இதற்கு நேர்மாறானது: மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் புகழ்பெற்ற பொதுவுடமைகளை வளர்த்துக்கொண்டு எளிமையாக வாழ்கிறார்கள். பார்வையாளர்கள் இதைப் பாராட்டுகிறார்கள், இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற மற்றும் அரிய காட்சியைக் காண, மாத்ரிமந்திர் பார்வைக்கு மரங்கள் நிறைந்த பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் 1 கிமீ க்கும் கூடுதலாக நடந்து செல்கின்றனர்: சுத்தமான, பசுமையான இடம். இதுவே இந்தியாவுக்குத் தேவையான வெற்றியின் மாதிரியாகும், இது ஏற்றத்தாழ்வைக் குறைக்கிறது மற்றும் மக்களை அவர்களின் சமூகம் மற்றும் இயற்கையிலிருந்து விலக்கி வைக்கும் கவர்ச்சியான நிலை சின்னங்களை நீக்குகிறது. ஏழைகள் நகரங்களில் குடியேறுவதைத் தடுக்கவும், இயற்கை வளங்களை பணக்காரர்கள் கையகப்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் இதுவே வழி.

மேற்கில் உலகின் போக்கு நகரமயமாக்கல் ஆகும். நகரங்கள் இருசக்கர வாகனங்களுக்கு ஏற்றதாக மாற்றப்படுகின்றன, நீர்வழிகள் புணரமைக்கப்படுகின்றன மற்றும் உலகம் முழுவதும் பசுமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்ல, நகரமயமாக்கல் ஆழமான துண்டிப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் மக்கள் தங்கள் நல்லறிவுக்கும், தங்கள் இதயங்களைத் திறப்பதற்கும், அவர்களின் உண்மையான இயல்புடன் மீண்டும் இணைவதற்கும் ‘வனக் குளியல்’ தேவை. அனைத்து ஞானிகளும் காடுகளில் அல்லது அதற்கு அருகில் தான் தியானம் செய்தார்களே தவிர குளிரூட்டப்பட்ட அறைகளிலோ அல்லது பளிங்குக் கோயில்களிலோ அல்ல, இதில்தான் ஆரோவில் சிறந்து விளங்குகிறது. இது காலநிலை குளிரூட்டும் காட்டில் சிறந்த நகர்ப்புற வசதிகளுடன் ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. இதுவே இந்தியா முழுவதும் பகிரப்பட்டு ஒரு இணக்கமான, அமைதியான எதிர்காலத்திற்காக.மாற்றியமைக்கப்பட வேண்டிய மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய மாதிரியாகும்.

ஆரோவில் என்ன செய்ய வேண்டும்

ஆரோவில் உள் மற்றும் வெளிப்புற தடைகளை கடக்க வேண்டும். ஆரோவில் தனது சாதனைகளை இன்று உலகிற்கு தேவையானதாக பார்க்க வேண்டும். ஒரு நகரம் என்ற உறுதியான ஆசையை விட்டுவிட முடியுமா? இன்று தெய்வீக சித்தத்தின் நனவான வெளிப்பாடாக அது தன்னைப் பார்க்க முடியுமா? ஒரு தெய்வீக சித்தம், அதைப் பின்பற்றுபவர்கள் அதன் நோக்கத்தை உண்மைக்கு ஏற்றவாறு விளக்கவும் மாற்றவும் அனுமதிக்கிறது. ஆரோவில்லில் உள்ள ‘வில்’ ஒரு கிராமத்தை, ஒரு பரிசோதனை கிராமத்தை குறிக்குமா?

உள் கட்ட அமைப்பில் , ஆரோவில் ஒரு தோல்வியுற்ற சுய மேலாண்மை பரிசோதனையின் தடத்தை அழிக்க வேண்டும், மேலும் சுய-ஆட்சியில் புதிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் சமீபத்திய முயற்சி மக்களை மனநிறைவிலிருந்து உலுக்கியது ஆனால் சமூகத்தை பிளவுபடுத்தியுள்ளது.

ஆரோவில் தனது கண்டுபிடிப்புக்கான திறமையை மீண்டும் பெற வேண்டும், அது தொடங்கிய பல சோதனைகளைத் தொடர வேண்டும், அவற்றில் பெரும்பாலானவை மெதுவாக உள்ளன. அது தன்னைத்தானே மீண்டும் உற்சாகப்படுத்திக் கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் (எ.கா. போக்குவரத்து, மாட்டு வண்டிகள் மற்றும் மினி ரயில்களில் சோதனை) முயற்சிகளைத் தொடங்க வேண்டும். அது தைரியமாக இருந்தால், ஆதரவு சக்திகள் காத்திருக்கின்றன.

வெளிப்புறமாக, அது வெற்றிடத்தை நிரப்ப வந்த சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுகிறது. சமீபத்திய நீதிமன்ற வெற்றி தற்போதைக்கு நம்பிக்கை அளிக்கிறது, ஆனால் ஆரோவில் இணக்கத்தை உருவாக்கி உறவுகளை சரிசெய்ய வேண்டும். அது மாநில மற்றும் தேசிய அரசாங்கங்களுடனும், பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு அரசாங்கங்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும், அதன் சிறப்பு சலுகைகள் தவறாக பயன்படுத்தாமல் , மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆரோவில் அழிவு சக்திகளை எதிர்க்க வேண்டும், ஒவ்வொரு இந்திய நகரத்தையும் அழித்த அதே சக்திகள். அவர்கள் முன்னேற்றத்தை உறுதியளிக்கிறார்கள், ஆனால் இது ஒரு தவறான முன்னேற்றத்திற்கு மிகவும் கவர்ச்சியான அழைப்பு. இது ஒரு பரிமாண சுயநல உயிரினத்திற்கு மட்டுமே முன்னேற்றம்; மனிதனின் மோசமான போக்குகளின் அடிப்படையிலான முன்னேற்றம்: பேராசை,அகங்காரம் மற்றும் மீதமுள்ள கொடிய பாவங்கள். ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீகத்தின் தீப்பொறியுடன் ஆன்மாவை உயர்த்தும், மனித ஒற்றுமையை அடையும், அனைத்து உயிர்களையும் உயர்த்தும் மேலும் சேதமடைந்த உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும் மனிதர்களுக்கான உண்மையான முன்னேற்றப் பாதையில் ஆரோவில் உறுதியாக இருக்க வேண்டும்

பின்னர் ஆரோவில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம், இந்தியாவைக் காப்பாற்ற உதவலாம் (இந்தியா அதை காப்பாற்றி கொள்ள விரும்பினால்), மேலும் இந்தியா மற்றும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு மனிதகுலத்திற்கு ஒரு புதிய விதியைக் கண்டறியும் வாய்ப்பை உருவாக்கலாம்.

rajesh
rajesh

Written by rajesh

writing, connecting, contemplating, writ…

No responses yet